Salem

News April 3, 2026

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியர்: யார்?

image

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் அ. அருண் தம்புராஜ், ஐ.ஏ.எஸ். 2012-இல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற இவர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும், மக்களுடன் எளிமையாகப் பழகுவதிலும் சிறந்தவர். கடலூரிலிருந்து இவர் மாற்றப்பட்டபோது, பொதுமக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தது இவரது மக்கள் பணிக்கான நற்சான்றாகும்.

News April 3, 2026

சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

image

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க

News April 3, 2026

சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

image

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க

News April 2, 2026

ஆத்தூர்: காங்கிரஸ் தொண்டர்கள் கடும் வேதனை!

image

ஆத்தூர் (தனி) தொகுதியில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 கடைசி நாள் என்பதால், சின்னம் வரைதல் மற்றும் தேர்தல் பணிகளைத் தொடங்க முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் மனவருத்தத்தில் உள்ளனர். இந்தத் தாமதம் அக்கட்சியினரிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது

News April 2, 2026

சேலம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சி தலைவர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் .அருண் தம்புராஜை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டாக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி தற்போது சுகாதார துறையில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறாா் .தற்போது தேர்தல் நடவடிக்கைகளில் ஒன்றாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றப்பட்டுள்ளார்.

News April 2, 2026

BREAKING:மேட்டூர், சங்ககிரி வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான நான்காம்கட்ட வேட்பாளர் பட்டியலை மருத்துவர் ச.இராமதாசு இன்று வெளியிட்டார். இதில் மேட்டூர் தொகுதி வேட்பாளராக K.V. துரைராஜ் மற்றும் சங்ககிரி தொகுதி வேட்பாளராக ஏ.ஆர். பச்சமுத்து ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ அருள் போட்டியிடுவார் என அறிவித்து இருந்தார்.

News April 2, 2026

BREAKING: சேலம் மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

image

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிருந்தா தேவி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, புதிய ஆட்சியராக அருண் தம்புராஜை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 2, 2026

இன்றைய ரோந்து பணியின் விவரம்.!..

image

சேலம் மாநகரில் இன்று ஏப்ரல்.2 இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுபவர்கள் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்ட உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

சேலம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

News April 2, 2026

சேலம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

சேலம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!