India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (06.10.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சிக்குட்பட்ட கள்ளுக்கடை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (அக்.06) இயக்கப்படவிருந்த அனைத்து அலையன்ஸ் ஏர் விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (அக்.06) முதல் அக்.08-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், அக்.10- ஆம் தேதியும் சேலத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்: மேச்சேரி சந்தைப்பேட்டைப் பகுதியில் இரவு முழுவதும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நிற்பதாக, இன்று அதிகாலை மேச்சேரி போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், காரில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 227 பாக்கெட்டுகள் ஹான்ஸ் குட்கா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK)நகரச் செயலாளர் சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், <

சேலம் ஆவினில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு வரும் அக்.14- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் பால் பண்ணை வளாகம், பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடக்கின்றது. நேர்முகத்தேர்வில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.