Salem

News March 24, 2025

இன்றே கடைசி நாள்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

சேலத்தில் ‘தீபாவளி சீட்டு’ மோசடி; 4 பேர் கைது

image

சேலம் மூலப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் , செந்தில்குமார்(50) , அவரது மனைவி செந்தமிழ் செல்வி(45). இவர்களுடன் லீலாவதி, பரத் ஆகியோர் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு கவர்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியநிலையில் தீபாவளிக்கு முன் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகினார். இது குறித்த புகாரின் அடிப்படையில் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News March 24, 2025

சேலம் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தூய்மை பாரத இயக்க சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

சேலத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி சிமெண்ட்

image

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மூன்று குடோன்களில் பிரபல நிறுவனங்களில் காலாவதியான சிமென்ட் கட்டிகளை கொண்டு வந்து, அதனை அரைத்து போலியான சிமெண்ட் தயாரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் மூட்டை சிமெண்ட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.

News March 24, 2025

சேலம்; காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 23, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 23, 2025

CLUB THROW-வில் தங்கம் வென்று அசத்தல்

image

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது கேலோ தேசிய பாரா விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், ஆடவர் பிரிவில் F51 CLUB Throw-வில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News March 23, 2025

தங்கம் வெள்ளி நிலவரம் போல் கொலை நிலவரம் என்ன? 

image

சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடப்பதாகவும், தற்போது தினமும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன என கேட்பது போல், தமிழகத்தில் கொலை நிலவரம் என்ன என கேட்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாக தமிழக அரசை குற்றமாட்டினார். 

News March 23, 2025

சேலம் மக்களே இந்த டைம்ல வெளியே போகாதீங்க!

image

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டி வெப்பக் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வெயிலில் சோர்வு, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News March 23, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

கோடைக்காலம் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் மார்ச் 28 முதல் ஜூலை 07 வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குன்னூர்- உதகமண்டலம், உதகமண்டலம்- குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்கள் (06177/06180) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!