India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆத்தூர் அருகே பழனியாபுரியை சேர்ந்தவர் செல்லமுத்து, (75). இவர் நேற்று காலை கொத்தம்பாடி பகுதியில் இருந்து பழனியாபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு பிரிவு சாலையில் திருப்பியபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிமுத்து, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆத்தூர் ஊரக போலிசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக “Child Line – 1098” தொடர்பு எண் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த எண் மூலம் ஆபத்தான சூழலில் சிக்கியுள்ள குழந்தைகள் உடனடியாக மீட்கப்படுவார்கள். குழந்தைகள் குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக.31)- ஆம் தேதி அன்று சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் (06127) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்.01- ஆம் தேதி சேலம் வழியாக விழுப்புரத்தில் இருந்து குஜராத் மாநிலம், உத்னாவுக்கு சிறப்பு ரயில் (06159) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக “Child Line – 1098” தொடர்பு எண் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த எண் மூலம் ஆபத்தான சூழலில் சிக்கியுள்ள குழந்தைகள் உடனடியாக மீட்கப்படுவார்கள். குழந்தைகள் குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்வு தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே 10 பேருந்துகள் சேலத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வந்த நிலையில், மீதமுள்ள பேருந்துகள் வர தொடங்கியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மா சாகுபடி செய்யும் விவசாயிகள் கல்தார் எனும் பெக்லோப் பூட்ரோசால் பயன்படுத்துவதால் மாம்பழத்தின் தரம் குறைந்து மாம்பழ கூழ் ஏற்றுமதிக்கான நிலையை அடையாமல் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் மாம்பழத்தை அடிக்கடி காய்ப்பதற்காக கல்தார் பயன்படுத்துவதால், நிலமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Office Assistant(OA), Attender, Faculty, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.14,000 முதல் 30,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆக.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் ஆகும்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்களில் 4,578 நபர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரும் செப்.06- ஆம் தேதி கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.