India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 42,930 பேர் பயன் அடைந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 10,599 பேர் கர்ப்ப கால சேவை மூலம் பயன் பெற்றதாகவும். சாலை விபத்துகளில் காயம் அடைந்த 7,171 பேர் பயன் பெற்றதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் ஆம்புலன்ஸ் அவர்களை விட 108 ஆம்புலன்ஸ் மூலம் அதிக அளவில் மக்கள் பயனடைந்துள்ளனர்.
சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம் அருகே உள்ள கிழக்கு தலைமை அஞ்சலகம், ஆத்தூர் தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் சிறு சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக, அஞ்சலகங்களில் தனி கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
நேற்று எடப்பாடி பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், தங்கள் கட்சி கொடியை கையில் ஏந்தியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதுமட்டும் இல்லாமல் அங்கு இருந்த பொது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சிவதாபுரத்தை சேர்ந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு பாமக சார்பில் புதிய வீடு கட்டி கொடுத்து அதன் சாவியை அவர்களிடம் அன்புமணி நேற்று வழங்கினார். அப்போது பேட்டி அளித்த அவர், சமூகநீதிக்காக திமுக போராடினால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பினார். வன்னியர் இட ஒதுக்கீடு 10.5%ஐ திமுக ரத்துசெய்தது என்றார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பூலாம்பட்டி எடப்பாடி ஆத்தூர் தம்மம்பட்டி மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த 23 பேர் கைது. ரூபாய் 31,710 பணம் இருசக்கர வாகனம் மற்றும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலாச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கார், சாலையின் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை சாலையில் சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்.
சேலம் மாவட்டத்தில் செப் 11ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம், பூசாரிப்பட்டியில் உள்ள ஆர்.பி.சாரதி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர்கள், சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி மாத தொடர் முகூர்த்தத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில், நேற்று ஒரே நாளில் 1,032 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 317.34 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வருகை தந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக எம்எல்ஏ அருள் சதாசிவம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத் தியாகி குப்புசாமி இல்லத்தை இன்று அன்புமணி ராமதாஸ் (செப்.08) திறந்து வைக்கவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.