India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளி வந்த “கோலிசோடா” திரைப்படம் தற்போது “கோலிசோடா ரைசிங்” என்ற பெயரில் இணையத் தொடராக நாளை (செப்.13) Disney+ Hotstar- ல் வெளியாகவிருக்கிறது. இதில் சேலத்தைச் சேர்ந்த குழந்தை நட்சத்திரம் வசியன் பிரபாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத்லேப் மூலம் கடந்த 7 மாதங்களில் மட்டும் 1,186 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேத்லேப் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சின்னதுரை (9). பூபதி மகன் கமலேஸ்வரன் (9). இரு சிறுவர்களும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும், விவசாயி பழனிசாமி என்பவரது கிணற்றில் குளிக்க இறங்கி நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சிறுவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு <
ஹுப்ளி- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.13ல் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கும், செப்.14- ல் கொச்சுவேலியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் ரயில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெங்கவல்லி திமுக முன்னாள் பேரூர் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஷேக்மொய்தீன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். இதனையடுத்து அவரது உடலுக்கு கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சின்னதுரை, பேரூர் செயலாளர் பாலமுருகன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், திருமணி முத்தாறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து சேலத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுப்பது தொடர்பாக செப்.15ஆம் தேதி தொடங்கி செப்.26ஆம் தேதி வரை 12 நாள்களில் 12 வகையான மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழா அழைப்பிதழை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சிபுரத்தில் வெளியிட்டார்.
சேலத்தில் இன்று (11-9-2024) மாலை 5 மணிக்கு சேலம் ஜங்சனில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சென்று சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நேற்று சேலம் மத்திய சிறையில் சிபிசிஐடியின் 9 மணி நேரம் விசாரணை நிறைவடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சிவகுமார் என்பவரை வேலூர் டிஐஜி வீட்டில் அடித்து துன்புறுத்தியதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை சேலம் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் கைதி சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 9 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் கோப்பில் கையெழுத்திட்ட பாவத்தை செய்தது நான் என சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மேலும், முதலீடுகளை ஈர்க்க என்ற அமெரிக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் பாட்டுப்பாடி சைக்கிள் ஓட்டுகிறார் என்றார்.
Sorry, no posts matched your criteria.