India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம் செல்வகணபதி Mp வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்குதாரமங்கலம் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து அண்ணாவின் சிலைக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரி (45) தனது மகன் மணிகண்டன் (15) உடன் மொபட்டில் நிலவாரப்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை சர்வீஸ் சாலையில் ரோட்டை கடப்பதற்காக முயன்ற போது அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதரவற்ற மகளிர் சுயதொழில் தொடங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் என்பதற்கான சுய அறிவிப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகலுடன் சேலம் கலெக்டர் அலுவல அறையின் 126ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் விண்ணப்பத்தை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 7- ம் நாளான நேற்று (செப்.13) சேலம் கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதி உற்சவர்களுக்கு வீரகணபதி, கிருஷ்ணா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் மாடவீதிகளில் கம்பீரமாக எழுந்தருளிய வீரகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எடப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய திட்டப் பணிகளுக்கும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ‘பாரதி இளம் கவிஞர்’ போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, சேலம் கல்லூரி மாணவி நிவேதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது” என்றார்.
அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
சேலம் கருப்பூரில் 18 ஏக்கர் பரப்பளவில் ₹20 கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் அண்ணா பூங்கா அருகில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் இரும்பாலை சாலையில் ஆவின் பால்பண்னை எதிரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு இசைப்பள்ளியில் புகைப்படம், இசைக் கருவிகள் குறித்த கண்காட்சி வரும் செப்.19 முதல் செப்.21 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.14- ல் சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கும், செப்.16- ல் கண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயிலில், 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன், சில முன்பதிவு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.