India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது வின்சென்ட், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு, 4ரோடு, பழைய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், ராமகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் பயன்படுத்த முடியாத பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களின் ‘Waste to Art’ என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் மாணவ, மாணவிகள் இயற்கைக்கு பாதிப்பில்லாத வகையில் பல்வேறு உருவங்களைச் செய்து காட்சிப்படுத்தினர். குறிப்பாக, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘சேலம் ஜங்சன் ரயில் நிலையம்’ வடிவமைப்பு பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
எரிவாயு நுகர்வோர்களுக்கான செப்-2024 மாத குறைதீர்க்கும் கூட்டம் வரும் செப்.27-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அறை எண்.115 மகிழம் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வுச் செய்துக் கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், சேலம் ஆவின் பண்ணையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு 40 டன் இனிப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டு ஆர்டர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்கான ஆவினின் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஆட்டையாம்பட்டி பஞ்சாயத்து செயலாளராக இருந்த மூர்த்தி முறைகேடு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2017-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் வேறு இடத்தில் பணி வழங்க உத்தரவிட்டும் வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணைக்கு சேலம் ஆட்சியர் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.23) காலை 10 மணிக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு வழங்கிய 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,400 மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆட்சியர் நேரில் வழங்கினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரப் பகுதிகளில் மாநகர காவல்துறை ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப் பேரில் கடந்த 2 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 27 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
சேலம் கருப்பூரில் மினி டைடல் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள மினி டைடல் பூங்காவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம்,அருள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.