Salem

News November 22, 2024

சேலம் வழியாக நாக்பூருக்கு சிறப்பு ரயில்!

image

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சேலம் வழியாக ஈரோடு- நாக்பூர் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நவ.23-ல் ஈரோட்டில் இருந்தும் நாக்பூருக்கும் (06163), நவ.27-ல் நாக்பூரில் இருந்தும் ஈரோட்டிற்கும் (06164) எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் 03, 04 ஆகிய தேதிகளில் ஆண்கள், பெண்களுக்கான பிரிவுகளில் நடைபெறவுள்ளன. ஓட்டம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

108 ஆம்புலன்ஸ் மூலம் நடப்பாண்டு 68,763 பேர் பயன்

image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை 68,763 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். இதில் விபத்தில் சிக்கி காயமடைந்த 12,430 பேரும், விஷம் குடித்த 5,445 பேரும், இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 4,152 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

News November 22, 2024

ஆத்தூர் தனி மாவட்டமா?

image

தமிழகத்தில் ஆத்தூர் உட்பட புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு ஃபேக்ட் செக் தகவல் வெளியிட்டுள்ளது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடவில்லை என்றனர். தவறான தகவல் பரவுகிறது எனவே ஆத்தூர் மக்களே ஷேர் பண்ணுங்க.

News November 22, 2024

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (நவ.22) இன்றைய நிகழ்ச்சிகள். ➤ காலை 9 மணி மாலை 5 மணி வரை சேலம் உருட்டாலையில் தொழிற்சங்க தேர்தல். ➤ காலை 10 மணி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம். ➤ காலை 10 மணி தெய்வீகம் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் விவசாய கண்காட்சி துவக்கம். ➤ காலை 09:30 to 1 மணி வரை அம்மாபேட்டை எஸ்பிஎம்எம் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம். ➤அருள்மிகு ஈஸ்வரன் கோவிலில் காலபைரவர் பூஜை. 

News November 22, 2024

ரயில் பயணத்தின் போது ஒரு சந்திப்பு

image

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு நேற்று மாலை சேலம் ஜங்ஷனிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதே ரயிலில் இருந்தார். இந்த எதிர்பாராத சந்திப்பு இரண்டு அமைச்சர்களிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 22, 2024

சேலத்தில் இன்று மின்தடை

image

சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று(நவ.22) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், கந்தம்பட்டி, தாரமங்கலம், உடையாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு கீழ் உள்ள ஊர்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது. Share பண்ணுங்க

News November 22, 2024

சேலம் வாக்காளர்களின் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 3,264 வாக்குச்சாவடிகளிலும் நவ.23, 24 ஆகிய தேதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தோட்டக்கலைத் துறை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிறுமலை கிராமத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர்  பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பண்ணையில் நடைபெறும் பணிகள் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 21, 2024

தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள்

image

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நவ.22இல் வெள்ளிக்கவுண்டனூரிலும், நவ.23இல் கருமந்துறையிலும், நவ.27இல் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், நவ.28இல் பச்சமலை, பெரியபக்களம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதனை பழங்குடியினர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!