India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையின் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகன பதிவிற்காக வந்தவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தலா ரூ.1 கோடியை வழங்கினார். ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவையில் இருந்து சேலம் வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தன்பாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை வரும் இன்று (செப்.25) அக். 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இன்று (செப்.25) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,282 கன அடியிலிருந்து 1,537 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 99.790 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 64.569 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் என்ற இடத்தில் கார் ஒன்று நெடு நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து பார்க்கும் பொழுது 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விஷமருந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சேலம் உள்பட 5 மாவட்டங்களில் நடக்கிறது. ஏற்காடு அடிவாரம் எமரால்டு வேலி பப்ளிக் பள்ளியிலும் ஈரோடு, பெருந்துறை, தர்மபுரி, கரியமங்கலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்டபட்ட பகுதியில் இன்று (25.9.24) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தொப்பூர், தீவட்டிப்பட்டி, நெத்திமேடு, தேவூர், ஆடையூர் ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டியில் டாம்கோ கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்தார். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, 8 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் டாம்கோ கடன் மேளாக்கள் நடைபெறவுள்ளன. எனவே அருகில் உள்ள வங்கி மற்றும் சங்கங்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.
சேலம், மேட்டூரில் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஓராண்டுக்கு முன்பு தமிழக வன எல்லை பகுதியில் வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க 10 சிறுத்தை குட்டிகளை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் விட்டதாக கிராம மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டினர். இது தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது வின்சென்ட், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு, 4ரோடு, பழைய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், ராமகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.