Salem

News January 9, 2026

சேலம்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

சேலம்: IOCL நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் வேலை!

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.<> https://iocl.com/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

ஜன.22 முதல் சேலத்தில் விளையாட்டுத் திருவிழா!

image

தமிழக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ்,”இது நம்ம திருவிழா” என்ற பெயரிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் வரும் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஜன.21-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்

News January 9, 2026

தாரமங்கல்: கல்யாண ஆசை காட்டி பணத்தை சுருட்டிய பெண்!

image

தாரமங்கல் அருகே ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்பெண் இவரைத் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் ‘CMC Global App’ என்ற பணத்தை முதலீடு செய்தால் பல கோடி வருமனாம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி 70 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளார். சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

News January 9, 2026

அறிவித்தார் சேலம் ஆட்சியர்!

image

சேலத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் அதிகபட்சம் ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விண்ணப்பங்கள் தற்பொழுது கோரிமேட்டில் உள்ள சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன என ஆட்சியர் இரா.பிருந்தாதேவி அறிவிப்பு

News January 9, 2026

சேலம்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

image

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கெங்கவல்லியில் காதல் ஜோடி தஞ்சம்!

image

கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் லோகநாதன் (25) கூலிதொழிலாளி. ஆத்துாரை சேர்ந்த ஜனனி (19) கல்லுாரி படிக்கிறார். இருவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு நேற்று கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்த போலீசார் பேச்சு நடத்தி லோகநாதனுடன், ஜனனியை அனுப்பினர்.

News January 9, 2026

சேலம்: ரயிலில் அடிபட்டு 377 பேர் பலி! அதிர்ச்சி தகவல்

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு இடங்களில் ரயிலில் சிக்கி 377 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் சேலத்தில் 132 பேரும், ஜோலார்பேட்டையில் 125 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர். காட்பாடி: 82, ஓசூர்: 20, தர்மபுரி: 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

News January 9, 2026

சேலம் மாநகரில் ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் நேற்று (ஜன.08) இரவு முதல் இன்று காலை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 9, 2026

சேலம் மாநகரில் ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் நேற்று (ஜன.08) இரவு முதல் இன்று காலை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!