Salem

News January 11, 2026

ஆத்தூர் அருகே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

image

தம்மம்பட்டியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் தனது தந்தை சுரேஷ் (47) என்பவருடன் சென்று மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், 17 வயது மாணவன் மற்றும் அவரது தந்தை சுரேஷ் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News January 11, 2026

சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்

2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து,உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்

3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்

4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து,உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

உயிரைக் காக்கும் சேலம் இளைஞர்களின் கொண்டாட்டம்

image

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் (ஜனவரி – டிசம்பர்) 17,463 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 37,914 பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவமனை டீன் தேவி மீனால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்வது அதிகரித்துள்ளதால், இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News January 11, 2026

BREAKING: சேலம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 11) சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சேலம் மக்களே… உங்க ஏரியால இப்போ மழை பெய்யுதா? இல்ல மேகமூட்டமா இருக்கா? உடனே கமெண்ட் பண்ணுங்க!

News January 11, 2026

வாழப்பாடி: குடும்பத் தகராறில் இளம் பெண் விபரீத முடிவு!

image

வாழப்பாடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் செழியன் மகள் நேத்ராவதி (27). இவருக்கும் சிங்கிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த நேத்ராவதி, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

சேலம்: போன் காணாமல் போச்சா? இனி கவலையே வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

தாரமங்கலத்தில் பயங்கரம்: அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!

image

தாரமங்கலம் பகுதியில் நேற்று நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் மூன்று பேர் பலியாகினர். ஓமலூர் பைபாஸில் டூவீலர் மீது டிராவல்ஸ் வாகனம் மோதி தொழிலாளி கண்ணன் (65) உயிரிழந்தார். அதேபோல், சாலையைக் கடக்க முயன்ற கும்பகர்ணவளவைச் சேர்ந்த சின்னதாயி (80) மற்றும் சேடப்பட்டியைச் சேர்ந்த பாப்பா (65) ஆகிய இரு மூதாட்டிகள் மீது பைக்குகள் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.10) இரவு முதல் இன்று காலை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!