India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு நாள் பயணமாக சேலம் வந்தார். இன்று ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி, கூடுதல் ஆட்சியர், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இதில் சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் துளசிவேணு ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும், ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையையும், உயரம் தாண்டுதலில் கல்லூரி மாணவி கோபிகா தங்கப் பதக்கமும், ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையையும் வென்று அசத்தினர்.
சேலத்தில் மாவட்ட அளவிலான கைமல்யுத்தம் (ARM WRESTLING) போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கமாண்டபட்டி காமலாபுரம், மற்றும் புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக அப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் டிச.23 முடிய பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம், மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், உளுந்து சாகுபடி விவசாயிகள் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினையும் ஆவணங்களுடன் அணுகிப் பதிவு செய்து தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்து பயனடையலாம்.
ஆயுதபூஜையை முன்னிட்டு, சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று (அக்.11) சாலைகளில் உடைக்கப்பட்டிருந்த திருஷ்டி பூசணிக்காய்களை இரவோடு இரவாக அகற்றும் பணியில் சேவகன் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். இளைஞர்களின் இத்தகைய சேவைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்பூஜை பண்டிகை இன்று சேலத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், 5 ரோடு, அம்மாப்பேட்டை, கோரிமேடு, ஏற்காடு அடிவாரம், பட்டைக்கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா என்பவர் வீட்டில், கடந்த 2 தினங்களுக்கு முன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60% தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45% தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட நிலையில், வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இவர் சேலத்தை சேர்ந்தவர் என கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயுதப்பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.