Salem

News October 4, 2024

அமைச்சர் ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு

image

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று (அக்.04) காலை சேலம் வருகை தந்த சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான ராஜேந்திரனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான திமுகவினர், அமைச்சருக்கு மாலை அணிவித்தும், மேள தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News October 4, 2024

ஏடிஎம் கொள்ளையன் சேலம் மருத்துவமனையில் அனுமதி

image

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே ஏ.டி.எம் கொள்ளை கும்பலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்ததில் காலில் குண்டு காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குண்டு பாய்ந்ததில் நரம்பு மண்டலம் பாதித்து, அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு வலது கால் எடுக்கப்பட்டது.

News October 4, 2024

சேலத்தில் 110 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

image

விடுமுறை நாளான அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சேலம் மாவட்டத்தில் அரசின் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 110 தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள், விளக்கம் அளிக்குமாறும் கோரியுள்ளனர்.

News October 3, 2024

சேலம் மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

image

தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டீனாக பவானி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவி மீனாள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேவி மீனாள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் குறிப்பிடத்தக்கது.

News October 3, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவும், வீடுகள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு
சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News October 3, 2024

இளம்பெண் கொலை: 6 தனிப்படை அமைப்பு

image

சேலம் மாவட்டம், சங்ககிரி வைகுந்தம் அருகே சூட்கேசில் சடலமாக கிடந்தது 18வயது இளம்பெண்ணை தலையில் அடித்து கொன்று வீசி உள்ளனர் என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து 6 தனிப்படைகள் அமைத்து சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 3, 2024

கொளத்தூர் மணி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

image

கடந்த 2013ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் மீது திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அதன் தலைவர் கொளத்தூர் மணி உட்பட ஐந்து பேர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற உலகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

News October 3, 2024

ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப் பணிகள்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.03) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 3, 2024

சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்த சேலம் துணை மேயர்

image

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் என்றும் உங்களுக்கு துணையாக நிற்போம் என்று சேலம் மாநகராட்சி துணை மேயர் கூறினார்.

News October 3, 2024

அடடே இப்படி ஒரு சைக்கிளா? மாணவர் அசத்தல்

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் 10ம் வகுப்பு மாணவர் அபிஷேக், தான் பயன்படுத்தி வரும் சாதாரண சைக்கிளில் 30 கிமீ வேகத்திறன் கொண்ட பேட்டரியைப் பொருத்தி, வெறும் 1 ரூபாய் செலவில் பள்ளிக்கு சென்று வருகிறார்.
பள்ளிக்கு செல்ல தினமும் 45 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக தெரிவித்துள்ள அவர், இந்த சைக்கிள் மூலம் தற்போது 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!