Salem

News October 6, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 8,268 கன அடியிலிருந்து 12,713 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 92.600 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 55.673 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 6, 2024

வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் தேங்கிய மழைநீர்

image

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, ஜாகீர் அம்மாப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, முனியப்பன் சிலைக்கு பாதியளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

News October 6, 2024

செஸ் போட்டியில் கோப்பையை வென்ற மாணவி

image

சேலம் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய சேலம் உடையாப்பட்டி கைலாஷ் மான்சரோவர் சிபிஎஸ்இ பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி மோஷிகா, கோப்பையும் மற்றும் சான்றிதழையும் பெற்றார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News October 5, 2024

அமைச்சரின் நெகிழ்ச்சி செயல்

image

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எண்ணெய் ஏற்றி சென்ற வாகனம் இன்று விபத்துக்கு ஆளான நிலையில், அந்த வழியே அரசு நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தைச் சீர் செய்திட அறிவுறுத்தினார்.

News October 5, 2024

என்னை போல் நிறைய நடராஜன்கள் வர வேண்டும்

image

விளையாட்டுத்துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் நம்பிக்கைதான் மூலதனம்; எவ்வளவு தடைகள் வந்தாலும், இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். என்னைப்போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும்” என சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64- வது ஆண்டு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் பேசினார்.

News October 5, 2024

சேலத்தில் 100 மருந்து கடைகள் மீது வழக்கு

image

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை விதிகளை மீறி சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஏற்காடு, மேட்டூர், தாரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர்தலைவாசல், சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டதாக 100 மருந்துக் கடைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சேலம் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 5, 2024

பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் மற்றும் காந்தி ஆகியோரின் பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டிகள் முறையே அக். 22, 23, 24 ஆகிய நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி சேலம் அரசுக் மகளிர் கலைக் கல்லூரியில் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

News October 5, 2024

தொடர் பண்டிகைகள்: ஆவினின் அசத்தல் ஆஃபர்!

image

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபரை வழங்கியுள்ளது. அக்.01 முதல் நவ.10 வரை ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூபாய் 690-க்கும், அரை லிட்டர் நெய் ரூபாய் 360-க்கும், அரை லிட்டர் ஆவின் வெண்ணெய் ரூபாய் 270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் அதிநவீன ஆவின் பாலகங்களில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை

image

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (28). இவர் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அந்தச் சிறுமியின் உறவினர்கள் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய சதாம் உசேனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

News October 5, 2024

சேலம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக கோவை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அக்.06ல் கோவையில் இருந்தும், அக்.07ல் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

error: Content is protected !!