Salem

News January 13, 2026

73 ஆயிரம் உயிர்களைக் காத்த சேலம் 108 சேவை!

image

சேலம் மாவட்டத்தில் 54 வாகனங்களுடன் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த ஆண்டில் மட்டும் விபத்து மற்றும் இதர அவசர காலங்களில் சிக்கிய 73,253 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக, கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 51 பெண்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஊழியர்களால் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

சேலம் இளைஞர் துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலையைச் சேர்ந்த சச்சின்(23), மதுபோதைக்கு அடிமையானதால் சேலம் குரங்குசாவடி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்தும் அங்கேயே தங்கியிருந்த அவர், நேற்று பொங்கல் கொண்டாட்டத்திற்காகக் கரும்பு கட்டுகளை மாடிக்கு எடுத்துச் சென்றார். அப்போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சச்சின் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!

News January 13, 2026

சேலம்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால்<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

image

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.

சேலம் அருகே கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், கணவாய்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜாலிகொட்டாய் பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியக் கலந்தாய்வு மற்றும் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் தவெவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களைத் தவெக நிர்வாகிகள் துண்டு அணிந்து வரவேற்றனர்.

News January 13, 2026

சேலத்தில் ஷாக்: ஆசனவாயில் காற்று செலுத்திய வாலிபர்

image

சேலம் அம்மாபேட்டை தறிப்பட்டறையில் பணியாற்றும் ஒடிசா வாலிபர் சுசான்தாஸ் (26), நேற்று இயந்திரம் சுத்தம் செய்யும் ஏர்டியூப் மூலம் விளையாட்டுத்தனமாகத் தனது ஆசனவாயில் காற்றைச் செலுத்தியுள்ளார். இதனால் அவரது வயிற்றில் காற்று வேகமாக புகுந்து, பெரிதாகி வீக்கமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

News January 13, 2026

கத்தியை காட்டி பொங்கல் போனஸ் கேட்ட நபர்

image

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாஸ்கர் காரியப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் வாழப்பாடி சேர்ந்த கந்தசாமி என்பவர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி பொங்கல் போனஸ் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூபாய் 300ஐ பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்

error: Content is protected !!