India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 18,094 கன அடியிலிருந்து 17,586 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 98.560 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 62.991 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(22.10.24) நாமக்கல்லுக்கு வருகை தருகிறார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதுடன், அரசு விழாவிலும் பங்கேற்கிறார். இதற்காக காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் விமான நிலையம் வரும் முதல்வர், சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
சேலம் மாநகரில் தொடர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு வந்த கிச்சிப்பாளையத்தில் சேர்ந்த ஆஷிக் அலி, வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு வந்த கௌதம் (எ) பொக்கையன் ஆகியோர் முதன்முறையாகக் மற்றும் தொடர் திருட்டு குற்ற செயலில் ஈடுபட்ட கன்னங்குறிச்சியை சேர்ந்த முத்து (எ) முத்தையன் 4வது முறையாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்துசிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன் குமார் உத்தரவு
சேலம், நங்கவள்ளி அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் 10 இணைகளுக்கும், பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 8 இணைகளுக்கும் என 18 இணைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 4 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், கைக்கடிகாரம், பூஜை பொருட்கள், கட்டில், பீரோ, மெத்தை, மிக்ஸி மற்றும் பாத்திரங்கள் என ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைகளுடன் அமைச்சர் ராஜேந்திரன் திருமணம் நடத்தி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சேலம் கோட்டம் சார்பில் வரும் அக்.30 முதல் நவ.05-ஆம் தேதி வரை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.21) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
“2026 தேர்தல் தான் உண்மையான Final, அதில் நாம் வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த 200+ தொகுதிகளையும் தாண்டி, திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது இளைஞரணியில் உள்ள நம் அனைவரின் கடமை. சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநகர, மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஆலோசனை கூட்டம். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் துணை முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் உள்ளனர்.
இன்று (அக்.21) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 62.14 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.