India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருநாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டு வருகிறது. எனவே, சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். மக்களே, இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கைதி சூரிய பிரகாஷ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டு ஆணி மற்றும் ஒரு சட்டை பட்டனை விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சிறை அதிகாரிகள் இதுகுறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் கொண்டை மல்லி பகுதியைச் சேர்ந்த வினிதா ஆகிய இருவர் மீது மாடு பாய்ந்து முட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

சேலம் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!

சேலம் மூணாங்கரடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கனிமொழி (47) என்பவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம்: மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தைச் சேர்ந்த ராஜா(25), 11-ம் வகுப்பு மாணவியைக் காதலித்து திருமணம் செய்தார். தற்போது கர்ப்பிணியான அந்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்படவே, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவிக்கு 17 வயதே ஆவதை அறிந்த மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆத்தூர்: கூலமேடு ஊராட்சியில் நாளை பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 600 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமுமின்றி போட்டியை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும். ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுகூட்டம், நடத்துவதற்கு பிரிவு 41, 1988 படி, மாநகர காவல் ஆணையரிடம் 5நாள் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.