India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே புக்கம்பட்டி எருதாட்டத்தை வேடிக்கை பார்த்த விவசாயி ராஜ்குமார் (57) மாடு முட்டி உயிரிழந்தார். முன்னதாக நேற்று ஆத்தூர் தம்மம்பட்டியில் மாடு பாய்ந்ததில் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் கொண்டைமல்லி பகுதியைச் சேர்ந்த வினிதா ஆகிய இருவர் உயிரிழந்தனர். 2 நாளில் சேலம் மாவட்டத்தில் மாடு முட்டி 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்குத் தகுதிச் சான்று (FC) கட்டணத்தை மத்திய அரசு சுமார் 13 மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.2,000 ஆக இருந்த கட்டணம் ரூ.25,000 வரை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அபரிமிதமான கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும்.சேலம் மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

சேலம் மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சேலம் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

சேலம் அருகே கஸ்தூரிபட்டியில் முறையற்ற உறவைக் கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த மகன் கார்த்தி தன் தாய் கனகவல்லியைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பின் உடலைத் தீயிட்டுக் கொளுத்தி, குழிதோண்டிப் புதைத்தாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பாக கனகவல்லியின் கணவா் தவசியப்பன், மகன் காா்த்தி, உறவினா் மணிகண்டன் உள்பட 5 பேரை கன்னங்குறிச்சி போலீஸாா் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

சேலம் மாநகரில் இன்று இரவு முதல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள உட்கோட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை அவசர காலங்களில் அழைக்க அழைக்கலாம். மேலும் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று இரவு முதல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள உட்கோட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை அவசர காலங்களில் அழைக்க அழைக்கலாம். மேலும் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.