India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம் நைனாம்பட்டி அருகே வழித்தடப் பிரச்சினை காரணமாக, 7 மாத கர்ப்பிணியான தரண்யா என்பவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி என்பவர் கல்லால் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் கோவிந்தராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சாதாரண தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பட்டியலிடப்படாத நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நிறுவனங்கள் வருகின்ற 23-ஆம் தேதிக்குள் கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை உரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் வரும் 28.01.2026 அன்று காலை 11 மணிக்கு, வெடிகுண்டு கண்டறியும் காலாவதியான உபகரணங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன. பங்கேற்பாளர்கள் ரூ.100 முன்பணம் செலுத்திப் பதிய வேண்டும். ஏலம் எடுத்தவர் முழுத்தொகையையும் 18% ஜிஎஸ்டியுடன் உடனடியாகச் செலுத்த வேண்டும். தவறினால் பொருட்கள் ஒப்படைக்கப்படாது மற்றும் இழப்புத் தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.19) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

மின் பராமரிப்பு காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை (ஜன.20) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின்தடை: தாதுபாய்குட்டை கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், செவ்வாய்ப்பேட்டை, முதல் அக்ரஹரம்,கருங்கல்பட்டி, களரம்பட்டி,குகை, எருமாபாளையம். சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி. தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி. பட்டைக்கோவில்,அன்னதானப்பட்டி!

சேலம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <

சேலம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.