Salem

News November 4, 2024

சேலம் மாநகரில் பரவலாக மழை

image

சேலம் மாநகரில் வின்சென்ட், அஸ்தம்பட்டி, 5 ஆவது தெரு, 4 ஆவது தெரு, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பேருந்து நிலையம், பட்டைக்கோவில், கடைத்தெரு, பொன்னம்மாப்பேட்டை, குரங்குச்சாவடி, ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி அயோத்தியாபட்டணம் உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

News November 4, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்ற கலெக்டர் 

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 245 மனுக்கள் வரப்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

News November 4, 2024

சேலம் இளைஞர்களே.. ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

எஸ்.எஸ்.ஐ.யை தாக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

image

சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கமலேஸ்வரி மற்றும் அவரது அண்ணன் கார்த்திக் ஆகியோர் நேற்றிரவு (நவ. 03) மத்திய பேருந்து நிலையத்திற்கு காரில் வந்த போது தடுத்த போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்.எஸ்.ஐ சரவணன் வேலன் கார் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கமலேஸ்வரி காலனியால் எஸ்.எஸ்.ஐ.யை தாக்கியுள்ளார். பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News November 4, 2024

சேலத்தில் அலைமோதிய கூட்டம்

image

சேலம் புதிய பஸ் நிலையத்திலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் நேற்று காலை முதல் இரவு வரையிலும் மக்கள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் புரிய வருகை புரிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

News November 4, 2024

சேலம்: உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்-ஈஸ்வரி தம்பதியின் 4 மாத பெண் குழந்தை ஆதிரை. 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி, ‘நோபல்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்த சாதனையை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியதில், அக். 22ல் உலக சாதனைப் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதிரைக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.

News November 3, 2024

ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

image

கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

News November 3, 2024

சங்ககிரி கிளை சிறையில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி கிளை சிறையில் காலியாக இருக்கும் சமையல் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வரும் 5ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

News November 3, 2024

சேலத்தில் அதிமுக கூட்டத்தில் இபிஎஸ் 

image

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கூட்டத்தில் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News November 3, 2024

சேலம்: நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்

image

தீபாவளி பண்டிகை நிறைவாக விடுமுறையின் கடைசி நாளான இன்று அதிகாலை முதல் ஆத்தூர் பஸ் நிலையத்தில் தொலைதூர பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டிற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து முன்பதிவுக்கான பயண சீட்டினை பெற்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

error: Content is protected !!