India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எறும்புத் திண்ணியை விற்பனை செய்ததாக ஏற்காட்டைச் சேர்ந்த குழந்தை, பழனி, சத்தியராஜ், மூர்த்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எறும்புத் திண்ணி விலங்கை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.25) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொளத்தூர், பாலமலையில் அன்னாசிப்பழம் பயிர் சாகுபடி செய்வது குறித்த சாத்தியக்கூறுகளை வேளாண்மைதுறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சேலம் மேல்சித்தூரில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகம் முழுவதும் அதிமுக-வில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. கூட்டணியை நம்பியே தேர்தலை சந்திக்கிறது திமுக என பேசினார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்மம்பட்டி அதிமுக நகர செயலாளர் பதவி வகித்து வந்தவர் குமரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தம்மம்பட்டியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அதிமுக கட்சிக்கு மிகவும் உழைத்தவர் என பொதுமக்கள் கூறினார்கள்.
வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அஞ்சல் துறையினர் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் பொதுமக்கள் தங்கள் அன்பும், ஆசிகளும் கொண்ட வாழ்த்து கடிதங்களை முன்கூட்டியே அனுப்புவதின் மூலம், தாங்கள் அனுப்பும் வாழ்த்துக்கள் உரியவரிடம் தக்க சமயத்தில் சென்று அடைய உதவுமாறு சேலம் கிழக்கு கோட்டத்தின் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.26, நவ.2,9,16 தேதிகளில் கோவையில் இருந்து பீகார் மாநிலம் பாராவுனிக்கும், மறுமார்க்கத்தில், அக்.29, நவ.5,12,19 தேதிகளில் பாராவுனியில் கோவைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு ரயில் திருப்பூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு கோட்டத்தில் குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. புதிதாக கணக்கு துவங்கும் முதல் 100 குழந்தைகள் (3 வயதிற்குட்பட்ட) பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சேலம் மாநகரில் இன்று (அக்.24) அதிகாலை கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் தேங்கிய நிலையில், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினை காவல்துறையினர் சரி செய்தனர். காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, அக்.26-ம் தேதி எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும் (07313), மறுமார்க்கத்தில், அக்.27-ம் தேதி கொல்லத்தில் இருந்து எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளிக்கும் (07314) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.24) காலை 6 மணி வரை 151.1 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, டேனிஷ்பேட்டையில் 47 மி.மீ. மழையும், ஆத்தூரில் 46 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 26.2 மி.மீ. மழையும், ஏத்தாப்பூரில் 15 மி.மீ. மழையும், சேலம் மாநகரில் 3.7 மி.மீ மழையும், மேட்டூர், கரியக்கோவிலில் தலா 4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.