India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு இன்று (அக்.27) மாலை நடைபெறவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர், கன்னங்குறிச்சி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த த.வெ.க.வினர் பேருந்துகள் மூலம் மாநாட்டு திடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
தீபாவளி அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் கோட்டத்திலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் நவ.4ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, கடலூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டை போக்குவரத்து இயக்குனர் தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியிலிருந்து 30,475 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.480 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 73.495 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 2500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.30, 31, நவ.03 தேதிகளில் ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், அக்.30, 31, நவ.03 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டிற்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வரும் அக்.27ல் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (06074), அக்.28ல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கும் (06073) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி முத்தம்பட்டி பஸ் நிறுத்தம் எதிரே, சென்னையில் இருந்து சேலம் நோக்கி தீபக் அவரது மனைவி தெய்வானை அவர்களது, 9மாத ஆண் குழந்தையுடன் காரில், இன்று காலை 7 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 மாத குழந்தை உயிரிழந்தது. கணவன், மனைவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அக்.26- ல் சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளாவின் கோட்டயத்துக்கும் (06091), அக்.27- ல் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (06092) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.சேலம் தனியார் ஹோட்டலில் உணவில் பல்-பணம் கேட்டு மிரட்டுவதாக உரிமையாளர் புகார்.
2.நான் கூறிய ஜோசியம் பலிக்கும் – இபிஎஸ்
3.ஓமலூர் அருகே எறும்புத் திண்ணியை விற்பனை- 4 பேர் கைது.
4.சேலத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
5. தம்மம்பட்டி அதிமுக நகர செயலாளர் காலமானார்.
சேலத்தில் உணவில் பல் இருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோரிமேட்டை சேர்ந்த நாகராஜ் என்பவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு மனித பல்லை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக உரிமையாளர் ராமசுப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.