India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக சேலம் கலெக்டர் பிருந்தா தேவி கூறியுள்ளார். சேலம் மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கனவே 2022 & 23 ஆகிய ஆண்டுகளில் புத்தகத் திருவிழா நடைபெற்றதை ஒட்டி இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 11,526 கன அடியிலிருந்து 10,566 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 107.100 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 74.349 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் சரக போலீஸ் டிஐஜி உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். இதற்கு 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 18-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறினார்.
மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட், மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் வரும் நவம்பர் 09ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுகவின் பாக முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டம், ஓமலூரில் இன்று (நவ.04) நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். கட்சியின் ஓமலூர் தொகுதிப் பார்வையாளர், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
➤சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ➤சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளியை பண்டிகையை முடித்து சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. ➤சேலத்தில் 4 மாத குழந்தை ஆதிரை 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ➤சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன், ராணி உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி, தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜேந்திரன் இன்று நேரில் சென்று வழங்கினார்.
சேலம் மாநகரில் வின்சென்ட், அஸ்தம்பட்டி, 5 ஆவது தெரு, 4 ஆவது தெரு, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பேருந்து நிலையம், பட்டைக்கோவில், கடைத்தெரு, பொன்னம்மாப்பேட்டை, குரங்குச்சாவடி, ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி அயோத்தியாபட்டணம் உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 245 மனுக்கள் வரப்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.