India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை – பரவுனி சிறப்பு ரயில் (03358) கோவையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வழியாக நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கு இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பரவுனி சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் “வீரத்தமிழர் முன்னணியின் ” சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆகிய நான் இன்று (நவ.19) முதல் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்றும், தலைவரின் வழியில் தமிழ்தேசிய பாதையில் தொடர்வேன் என வைரம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். நா.த.க.வின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.
சேலம் மாநகரம், கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக ஜிம்மிலேயே உயிரிழந்தார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து வந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நவ.20-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில், புதிய நியாய விலைக்கடை கட்டடங்களைத் திறந்து வைத்தும், புதிய கூட்டுறவு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் வரும் நவ.25ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோர் துணி நூல் துறை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் dd.textile.salem.regional@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மலைகளால் சூழ்ந்து காணப்பட்டதால் “சைலம்” என்று அழைக்கப்பட்டு அது “சேலம்” என மருவியதாகவும். சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு சேலம் என மருவியதாக கூறப்படுகிறது. மேலும், சேலை நெசவுக்கு பெயர் பெற்று சேலையூர் என்ற பெயர் “சேலம்” என காலப்போக்கில் மருவியதும் என கூறுவார்கள். எனவே, சேலம் மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமென்ட் செய்யவும்.
➤அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டிய பொன்.மாணிக்கவேல் ➤அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட் ➤சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் ➤நாதக மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் ➤சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம் ➤பேனர் கிழிப்பு: மறியலில் ஈடுபட்ட விசிகவினர் ➤மழையில் முளைத்த விஷகாளான் உதயநிதி: EPS ➤ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்திந்த அவர், கோயில் பாதுகாப்பு படையை தமிழக அரசு உடனடியாக கலைத்திட வேண்டும் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் மிகவும் மோசமானவர்கள் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் கோயில் பணத்தை அதிக அளவு திருடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி சார்ந்த பணிகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேலம், அரியாம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சீதாராமனை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரிய வந்ததால் நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றியதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.