India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (நவ.22) பள்ளி அளவிலும், நவ.25-ல் வட்டார அளவிலும், நவ.27-ல் மாவட்ட அளவிலும் கட்டுரை போட்டிகள் நடக்கவுள்ளன. ‘அய்யன் வள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்’, “எனக்கு பிடித்த திருக்குறள்” தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி, சங்ககிரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (நவ.21) மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம், GH, சங்ககிரி, அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், கோர்ட் ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம்.
சபரிமலை சீசனை முன்னிட்டு நவ.20 முதல் ஜன.16 வரை சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் சென்னை சென்ட்ரலில் இருந்தும், வியாழன்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழ்நாடு அரசின் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் வழக்கறிஞர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் வழக்கறிஞர் கண்ணன் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கொடூரமாக வெட்டப்பட்டதை கண்டித்து, இன்று மற்றும் மறுநாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
சேலத்தில் மாநில அளவிலான கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கத்தில் 3300 காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான நேர்காணல் நடைபெற்று டிசம்பர் மாத இறுதிக்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இந்த துறைக்கு வந்துள்ள பல்வேறு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று (நவ.20) கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, சேலம், கள்ளக்குறிச்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இணைப்பு ரயில்களின் வருகை தாமதம் காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) இன்று (நவ.20) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.05 மணிக்கும், கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
“தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வரவு, செலவுக் கணக்குகளைத் தொடங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாதக-வில் இருந்து தொடர்ந்துஅடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.