Salem

News November 22, 2024

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (நவ.22) இன்றைய நிகழ்ச்சிகள். ➤ காலை 9 மணி மாலை 5 மணி வரை சேலம் உருட்டாலையில் தொழிற்சங்க தேர்தல். ➤ காலை 10 மணி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம். ➤ காலை 10 மணி தெய்வீகம் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் விவசாய கண்காட்சி துவக்கம். ➤ காலை 09:30 to 1 மணி வரை அம்மாபேட்டை எஸ்பிஎம்எம் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம். ➤அருள்மிகு ஈஸ்வரன் கோவிலில் காலபைரவர் பூஜை. 

News November 22, 2024

ரயில் பயணத்தின் போது ஒரு சந்திப்பு

image

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு நேற்று மாலை சேலம் ஜங்ஷனிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதே ரயிலில் இருந்தார். இந்த எதிர்பாராத சந்திப்பு இரண்டு அமைச்சர்களிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 22, 2024

சேலத்தில் இன்று மின்தடை

image

சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று(நவ.22) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், கந்தம்பட்டி, தாரமங்கலம், உடையாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு கீழ் உள்ள ஊர்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது. Share பண்ணுங்க

News November 22, 2024

சேலம் வாக்காளர்களின் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 3,264 வாக்குச்சாவடிகளிலும் நவ.23, 24 ஆகிய தேதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தோட்டக்கலைத் துறை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிறுமலை கிராமத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர்  பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பண்ணையில் நடைபெறும் பணிகள் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 21, 2024

தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள்

image

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நவ.22இல் வெள்ளிக்கவுண்டனூரிலும், நவ.23இல் கருமந்துறையிலும், நவ.27இல் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், நவ.28இல் பச்சமலை, பெரியபக்களம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதனை பழங்குடியினர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 21, 2024

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் பட்டியலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இன்று சங்கிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ஊரகம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News November 21, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤வாழப்பாடி அருகே பிடிபட்ட எறும்பித் திண்ணி ➤சேலத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ➤லஞ்சம் பெற்ற மின்சார ஊழியர்கள் கைது ➤குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுறுத்தல் ➤வள்ளுவர் சிலை வெள்ளி விழா: கட்டுரை போட்டி ➤நள்ளிரவில் மர குடோனில் தீ விபத்து ➤சேலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு ➤2 நாட்கள் பணி புறக்கணிப்பு-வழக்கறிஞர்கள் சங்கம்.

News November 21, 2024

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள அருனூத்துமலை கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர் சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 21, 2024

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுரை

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மேற்கு மாவட்டத்தில், 3 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் செல்வகணபதி எம்பி, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொண்டர்கள் அன்னதானம், ரத்ததானம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

error: Content is protected !!