Salem

News November 24, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில்

image

சேலம் வழியாக விசாகப்பட்டினம் – கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. டிச.04,11,18, 25, ஜன.01,08,15,22,29, பிப். 05,12,19,26 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில், டிச. 05,12,19,26, ஜன.02,09,16,23,30, பிப். 06,13,20,27 தேதிகளில் கொல்லத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடம் நின்றுச் செல்லும்.

News November 24, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

image

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர் அளவு குறைய தொடங்கியது. 7,545 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 6,422 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

News November 24, 2024

லஞ்ச வழக்கில் சிக்கிய 2 மின் ஊழியர் சஸ்பெண்ட்

image

சேலம், மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த வணிக ஆய்வாளர் மணி, ஃபோர்மேன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டனர். புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க இருவரும் ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் பணி நீக்கம் செய்து மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். 

News November 24, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்:➤ காலை 10 மணி மனம் மன்றம் பாவலர் 75 பவள விழா சண்முக மருத்துவமனை.➤ காலை 10 மணி முத்தமிழ் மன்றம் தமிழர் விருது வழங்கல் சேலம் கேசில்.➤ காலை 10 மணி நாம் தமிழர் கட்சியின் ரத்த தான முகாம் தாதகாப்பட்டி.➤ காலை 8 மணி சிறார்களுக்கு ஓவியத் திறனை மேம்படுத்தும் மகிழ்ச்சி சுவர் திட்டத்தின் கீழ் ஓவிய போட்டி.➤ மதியம் 3 to 4 மத்திய அரசை கண்டித்து இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்.

News November 23, 2024

சேலம் இரவு நேர ரோந்துபணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில். அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு. இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News November 23, 2024

ஓவியர், சிற்ப கலைஞர்களின் கவனத்திற்கு

image

சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி. கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் சிறந்த கலை படைப்புகளுக்கு அரசின் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் சேலம் மண்டல அலுவலகத்தை 0427-2386197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News November 23, 2024

கிராம சபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

image

சேலம், தளவாய்ப்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ரா.பிருந்தாதேவி பார்வையாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், ஒன்றியக் குழுத்தலைவர் மலர்க்கொடி ராஜா, தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News November 23, 2024

Ex.அமைச்சர் நினைவிடத்தில் மரியாதை

image

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 12-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (நவ.23) சேலம் மாவட்டம், பூலாவரியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், மாலை வைத்து மரியாதைச் செலுத்தினார். தொடர்ந்து, திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், தி.மு.க. நிர்வாகிகள் மரியாதைச் செலுத்தினர்.

News November 23, 2024

சேலத்தில் இன்று கிராம சபை கூட்டம்

image

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News November 23, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (நவ.23) இன்றைய நிகழ்ச்சிகள். ➤மூவேந்தர் கலை அரங்கில் திரையிடலும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ➤தெய்வீகம் திருமண மண்டபத்தில் விவசாய கண்காட்சி இரண்டாம் நாள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.  ➤ சேலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.  ➤சொத்து வரி, குடிநீர் இணைப்பு வரி ரூ.7.59 லட்சம் நிலுவை வைத்திருந்ததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு.

error: Content is protected !!