Salem

News November 17, 2024

சேலம் வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

சேலம், மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரி நிரம்பும் உபரி நீர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு காவேரி உபரி நீர் நடவடிக்கை குழு சார்பில் பாராட்டு விழா மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டியில் இன்று நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார்.

News November 16, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤புதிய கோயில் கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் ➤கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு ➤அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் மறுபரிசோதனை ➤போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் ➤ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி: அதிகாரிகள் ஆய்வு ➤சேலத்தில் மல்லிகை பூ விலை அதிகரிப்பு ➤ஹேண்ட்பேக் தயாரிக்க இலவச பயிற்சி ➤மாலையிட்டுக் கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ➤சங்ககிரியில் பரவும் வாட்ஸ்அப் தகவலால் ஆய்வு.

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட  அமைச்சர்

image

சேலம், நாராயண நகரில் உள்ள மாநகராட்சி பாவடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில்  சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் பார். இளங்கோவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

News November 16, 2024

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவிதொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிய, புதுப்பித்தல் விண்ணப்பங்கள் செய்ய விரும்பும் மாணாக்கர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.110ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ (அ) https://bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கலாம்.

News November 16, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு

image

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் இன்று (நவ.16) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் ஒன்றான நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News November 16, 2024

சேலத்தில் மல்லிகை பூ விலை உயர்வு

image

சேலத்தில் உள்ள புகழ்பெற்ற வ.உ.சி. பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை இன்று (நவ.16) வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கட்டான், மலைக்காக்கட்டான் தலா ரூ.550-க்கும், ஜாதி மல்லி ரூ.480-க்கும், சி.நந்திவட்டம் ரூ.1,000-க்கும், நந்தியாவட்டம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News November 16, 2024

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம்

image

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,269 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் இன்று (நவ.16), நாளை (நவ.17) மற்றும் வருகிற 23, 24-ந் தேதிகள் ஆகிய 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,264 வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.

News November 16, 2024

சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்

image

சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், திருப்பூர், ஈரோடு, போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News November 16, 2024

அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் மாநாடு

image

சேலத்தில் இன்று சனிக்கிழமை (16-11-24) காலை 10:30 அமைச்சர் ராஜேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், அரிசி பாளையம் பகுதியில் உள்ள செயின் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதி வண்டிகளை வழங்குகிறார். ஒய்.எம்.சி.ஏ ஹாலில் சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் மகளிர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடைபெற்று மாலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

News November 16, 2024

சங்ககிரியில் பரவும் “வாட்ஸ் அப்” தகவலால் ஆய்வு

image

சேலம்: கலியனூரில் இருந்து ராயலூர் செல்லும் வழியில் உள்ள செட்டியார் காட்டில் மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள ”வாட்ஸ் அப்-பில்” தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து வனக்காப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யவுள்ளனர்.

error: Content is protected !!