India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

சேலம் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், விவசாயிகள் கோரும் விலையை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தாரமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மகாதேவன் (43), வீடு கட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மாநில அரசின் ‘104’ உதவி எண் அல்லது ‘044-24640050’ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் தாமோதரன் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி கொத்தம்பாடியிலிருந்து ஆத்தூருக்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, டூவீலர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியானா மாநிலம் பிணங்குவான் பகுதியில் உள்ள நகைக்கடையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யாசிங் (எ) பரத் மற்றும் ராஜன்பாபு ஆகிய இரு பவாரியா கொள்ளையர்கள் சேலத்தில் பிடிபட்டனர்.பனமரத்துப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தச்சு வேலை செய்பவர்கள் போல பதுங்கியிருந்த இவர்களை, அரியானா மற்றும் சேலம் தனிப்படை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்

சேலம் மாநகரில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Sorry, no posts matched your criteria.