India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இதன் காரணமாக, இன்று ஆக.04 முதல் ஆக.07- ஆம் தேதி வரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <

சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்டர் செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

➡️ சேலம் மாவட்டத்தில் நாளை 76,999 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி 26 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சியில் கோழி வளர்ப்பு, தீவனம் தயாரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 994178451 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க இங்கு <

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை, குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் <

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்தெந்த இடங்களில் நடைபெறும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரமங்கலம், எருமாபாளையம், எடப்பாடி, அயோத்தியாபட்டினம், திருமலகிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.