Salem

News April 26, 2024

சிம்கார்டை விழுங்கிய கைதியால் பரபரப்பு

image

சேலம் மத்திய சிறைச்சாலையில், ரமேஷ் என்ற கைதி இன்று(ஏப்.26) சிம் கார்டை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம் கார்டை மீட்ட சிறை துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உறவினர்களை  சந்திக்க கைதி ரமேஷுக்கு 3 மாதம் தடைவிதித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 26, 2024

சேலம்: இபிஎஸ் திறந்து வைத்த நீர், மோர் பந்தல்

image

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், இன்று(ஏப்.26) சூரமங்கலம் பகுதியில் நீர், மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News April 26, 2024

சேலம் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

சேலத்தில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் சேலத்தில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

சேலம்: தந்தையை கொலை செய்த மகன் கைது

image

சேலம் அருகே சொத்து பிரச்னையில் தந்தையை, மகனே அடித்து கொன்ற சிசிடிவி காட்சி நேற்று(ஏப்.25) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் போலீசார் நேற்று சக்திவேல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். சொத்து பிரச்னையில் குழந்தைவேலுவை, அவரது மகன் சக்திவேல் அடித்துக் கொலை செய்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News April 26, 2024

சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்!

image

சேலம் மாவட்டத்தில் கடும் வெப்பம் பதிவாகி வருவதால் கறவை மாடுகளை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். மாடுகளை மேய்ச்சலுக்கு காலை 7-11 மற்றும் மாலை 4-6 மணி வரை கொண்டு செல்லவும், தினமும் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் குடிக்க வழங்கவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

News April 25, 2024

சேலத்தின் சொத்தான முட்டல் இயற்கை மடி!

image

ஆத்தூர் முல்லைவாடி சாலையில் அழகிய முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவியும், ஏரியும் உள்ளது. இந்த ஏரியிலிருந்து அருவிக்கு செல்ல படகு சவாரியும் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கையோடு சேர்ந்து சுற்றிப்பார்க்க ஏற்ற இடமாக விளங்கிறது.

News April 25, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

சேலத்தில் பீர் விற்பனை 60% அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் விற்பனை கூடியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையாததால் பீர் விற்பனை அதிகாரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

சேலம்: 115 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

image

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதத்தில் வாகன சோதனை நடத்தியதில் செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வந்த 115 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்பு ஏற்படுத்திய 76 பேர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

3வது இடம் பிடித்த சேலம்!

image

இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான இடங்களில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் நேற்று(ஏப்.23) அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடை காலம் ஆரம்பித்து வெயில் கொளுத்தும் நிலையில் ஆங்காங்கே வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி நாட்டிலேயே வெப்பநிலையில் ஈரோடு 3வது இடம்(நேற்று முன்தின நிலவரப்படி) பிடித்திருந்த நிலையில், சேலம் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.