Salem

News December 25, 2024

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 25 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

News December 25, 2024

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்!

image

➤சேலம் மாவட்டத்தில் இன்று கலைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ➤சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் நாளை நடைபெறுகிறது. ➤மாவட்டம் முழுவதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤சேலத்தில் 100 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது: காவல்துறை அதிரடி ➤சேலம் வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

News December 25, 2024

சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து

image

சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிச.26, 30, ஜன.2, 6ல் திருவனந்தபுரம் நார்த்-கோர்பா, டிச.28 ஜன.01,04,08-ல்கோர்பா- திருவனந்தபுரம் நார்த்,டிச.26,ஜன.03,05-ல் கோரக்பூர்-திருவனந்தபுரம் நார்த்,டிச.31,ஜன.07,08-ல் திருவனந்தபுரம் நார்த்-கோரக்பூர்,டிச.28, ஜன.04-ல் திருவனந்தபுரம் நார்த்-இந்தூர், டிச.30, ஜன.06-ல் இந்தூர்-திருவனந்தபுரம் நார்த் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News December 25, 2024

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்: இபிஎஸ் 

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “கிறிஸ்துமஸ் நாளில், நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டு, அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் என்றார்.

News December 25, 2024

தேர்தல் செலவின தொகையை விடுவிக்காத தேர்தல் ஆணையம்

image

சேலத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாடாளுமன்றத் தேர்தல் செலவின தொகையைத் தேர்தல் ஆணையம் விடுவிக்காததால் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறையினர் சிரமம் அடைந்துள்ளனர். நாடாளுமன்றத் செலவினங்கள் செய்தது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பு; அவர்கள் முடிவு செய்து தொகையை விடுவிப்பார்கள் என சேலம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல். 

News December 25, 2024

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம்

image

ஃபெஞ்சல் புயல் 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நேற்று (டிச.24) சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

News December 25, 2024

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

சேலம் மாநகரில், இரவு நேரங்களில், குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 24, இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

News December 24, 2024

சேலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 2024 மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 27ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை சம்பந்தமாக தங்களது குறைகளை, நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் வழங்கலாம் என, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 24, 2024

நாளை 2 மணி வரை மட்டுமே செயல்படும் 

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் செயல்படும் கணினி முன்பதிவு மையங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச.25) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. எனவே, ரயில் பயணிகள் இதனைக் கருத்தில் கொண்டு கணினி முன்பதிவு மையங்களுக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்த கருத்தரங்கம் 

image

சிறுபாசன ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (டிச.24) சேலத்தில் நடைபெற்றது.

error: Content is protected !!