Salem

News May 5, 2024

மேட்டூர் அணையில் அலைமோதிய கூட்டம்

image

இன்று (மே.05) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மேட்டூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் பூங்கா மற்றும் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News May 5, 2024

இன்று மழைபெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

ஏற்காடு சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை

image

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.

News May 5, 2024

தலையாரியூர் கும்பாபிஷேக விழா

image

ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி ஊராட்சி தலையாரியூர் பகுதியில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் உள்ளது இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி கேசவ பெருமாள் கோவில் இருந்து யானை குதிரை பசுக்களுடன் பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

News May 4, 2024

ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – இ.பி.எஸ்

image

ஏற்காடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை இன்று(மே 4) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News May 4, 2024

சேலம்: மனைவி பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை!

image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் புது மனைவி தன்னை பிரிந்து கல்லூரி விடுதிக்கு சென்ற ஏக்கத்தில், கட்டட தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் மாயமான நிலையில் நேற்று(மே 3) இவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

சேலத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(மே – 03) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 3, 2024

சேலம் மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

சேலம் மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு

image

சேலத்தில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவு தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் உப்பு சர்க்கரை கரைசல் நீரை குடிக்கலாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News May 3, 2024

சேலம் சங்ககிரி கோட்டை வரலாறு!

image

சேலத்தில் சங்ககிரி சதுக்கம் என்ற மலை மேல் அமைந்துள்ளது சங்ககிரி கோட்டை. சங்கு வடிவ இக்கோட்டை விஜயநகர பேரரசரால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கொங்குநாட்டிற்கான வரி வசூல் கிடங்காக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. மன்னர் திப்பு சுல்தானின் முக்கியமான படைத்தளமாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் படைத்தளமாகவும் இருந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை இங்கு தான் தூக்கிலிடப்பட்டார்.