Salem

News May 7, 2024

சேலத்தில் 105.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(மே.6) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

News May 6, 2024

சேலத்தில் வெளுத்து வாங்கும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.6) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 6, 2024

சேலம் தேர்வு முடிவுகள் விவரம்

image

தமிழகம் முழுவதும் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள், 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

சேலத்தில் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

சேலம்: 351 பேர் நீர் தேர்வுக்கு வரவில்லை!

image

நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று(மே 5) நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் 11,144 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 24 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது. காலை 11 மணியில் இருந்து தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகளை கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 351 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

News May 6, 2024

சேலம் மாவட்டத்தில் 34,908 பேர் தேர்ச்சி!

image

தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

+2 RESULT: சேலத்தில் 94.60% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 94.60% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.35 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.51% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

சேலம்: பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்த இளைஞர்!

image

சேலம், வீரகனூர் அருகே வெள்ளையூரை சேர்ந்த இளைஞர் கோவிந்தராஜ்(23). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திய நிலையில், ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் மே 2ம் தேதி தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(மே 5) உயிரிழந்தார். வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 6, 2024

கெங்கவல்லி அருகே பற்றி எரிந்த செடிகள்!

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி கன்னிமார் கோயில் அருகில் வெயிலின் தாக்கத்தால் புல், பூண்டு எரிவதாக நேற்று(மே 5) அந்த பகுதியில் உள்ள மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

News May 5, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே.5) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.