India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிநாட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 – 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி சேலம் உட்பட 12 மாவட்டங்களில் இன்று(மே 8) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜோலார்பேட்டையில் 17 பேரும், காட்பாடியில் 16 பேரும், ஓசூரில் 4 பேரும், சேலம் மற்றும் தர்மபுரியில் தலா 3 பேரும் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.7) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.0 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த ரயில் திரிச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேலத்தில் நின்று செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன், ஆட்டோ டிரைவர், மனைவி ஆனந்தி. முனியன் சரிவர ஆட்டோ ஓட்ட செல்லாமல் மதுகுடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தி நேற்று மதியம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
சேலம், இளம்பிள்ளை அடுத்த ஏகாபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கோபால்-சந்திரசேகர். கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மே 6) சந்திரசேகரின் மனைவியை, கோபால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, சந்திரசேகர் தனது அண்ணன் கோபால் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரசேகரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் கிழக்கு தொடர்ச்சிமலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள சுற்றுத் தலமாகும். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகின்ற இந்த ஏற்காடு 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. 383 சகிமீ கொண்ட ஏற்காட்டில் பல பூங்காக்கள், ஏரிகள், படகு சவாரி, பாரா கிளைடிங், கோயில்கள் என பல இடங்கள் இங்குள்ளன. இதன் காலநிலைக்காகவும் , பசுமைக்காகவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.