Salem

News December 31, 2024

 இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

image

“புத்தம் புது நம்பிக்கைகள் மலர தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்; தமிழக மக்கள் நிம்மதியாக வாழ ஏற்ற சூழலை ஏற்படுத்த ஒன்றுபட்டு நிற்போம்”- என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

சேலம்: நட்சத்திர விடுதிகளுக்கான கடும் கட்டுப்பாடு

image

சேலத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு உரிமம் பெற்றுள்ள நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளைக் முடித்துக் கொள்ள வேண்டும். வளாகத்திற்குள் வரும் வாகன விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும், ஆபாசமில்லாமலும் நடத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். 

News December 31, 2024

சேலம் வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள்!

image

மஹா கும்பமேளாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஜன.18, பிப்.15-ல் மங்களூரு சென்ட்ரலில் இருந்து வாரணாசிக்கும், மறுமார்க்கத்தில், ஜன.21, பிப்.18-ல் வாரணாசியில் இருந்து, மங்களூரு சென்ட்ரலுக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

ஈரோடு-நான்டேட் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

ஈரோடு- நான்டேட் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் மார்ச் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில், மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்டேட்- ஈரோடு சிறப்பு வார ரயில் வெள்ளிக்கிழமை தோறும், ஈரோடு-நான்டேட் சிறப்பு வார ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

News December 31, 2024

பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்

image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன.05ஆம் தேதி காலை 6 மணிக்கு “பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்” நடைபெறும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000,  2-ம் பரிசாக ரூ.3,000, 3ம் பரிசாக ரூ.2,000 மற்றும் நான்கு முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார். 

News December 31, 2024

புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டில் மது போதையில், வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். பொது இடங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து, மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. மீறி செயல்படுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

News December 31, 2024

புத்தாண்டு: சேலம்- சென்னை விமான கட்டணம் உயர்வு!

image

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, சேலம்- சென்னை இடையே இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வரும், இண்டிகோ நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூபாய் 3,000 ஆக கட்டணம் உள்ள நிலையில், டிச.31-ல் பயணிக்க ரூ.5,126 ஆகவும். ஜன.01- ல் ரூ.6,491 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம் பயணிப்பதற்கு ரூ.5,800 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது.

News December 31, 2024

சேலம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று (டிச.30) நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமணநிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட 265 கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டன.

News December 31, 2024

மாவட்ட காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள், நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 30, 2024

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

error: Content is protected !!