Salem

News February 26, 2026

சேலம்: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

image

சேலம் மாநகராட்சியில் (25.02.2026) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News February 25, 2026

சேலம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan எ<<>>ன்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

சேலம்: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமானச் சான்றிதழ் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

சேலம்: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

image

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 25, 2026

சேலம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

ஆத்தூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி!

image

ஆத்தூர் மல்லியக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம் (25), நேற்று டூவீலரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். தாண்டவராயபுரம் அண்ணா நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

சேலம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை மற்றும் உணவக மேலாண்மை பயில தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். +2 முடித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 25 அன்று நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக www.tahdco.com மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News February 24, 2026

சேலம்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிப்.24 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News February 24, 2026

சேலம்: வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க

image

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0427-2420011
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 24, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

error: Content is protected !!