Salem

News December 24, 2024

சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான சேவைகள் (6E7919/ 6E7923) இன்று (டிச.24) ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தகவல்.

News December 24, 2024

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (டிச. 24) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி வருமானவரித்துறை அலுவலகம் முன்பு அம்பேத்கர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம். 2) காலை11 மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் 10.5% கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 3) காலை11 மணி சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம். 4) காலை10 மணி குமாரசாமி பட்டி ஆயுதப்படை மைதானத்தில ஏலம் விடும் வாகனங்களை பார்க்க அனுமதி.

News December 24, 2024

சேலத்தில் பைக், கார் ஏலம்

image

சேலம் மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு காலாவதியான 9 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் வரும் 26ஆம் தேதி குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நான்கு சக்கர வாகங்களுக்கு ரூ.5,000, பைக்கிற்கு ரூ.1000 முன்பணமாக செலுத்தவும். மேலும், விபரங்களுக்கு 94981-67289 என்ற எண்ணை அழைக்கவும்.

News December 24, 2024

சேலம் மாநகரில் இரவு நேர ரோந்து காவலர் விபரம்!

image

சேலம் மாநகரில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 23 இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.

News December 23, 2024

சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சமூகத்தினர், ஆண்டு வருமானம் 72 ஆயிரத்து கீழ் உள்ளவர்கள், 21 முதல் 45 வயது உள்ளவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பதிவு செய்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 

News December 23, 2024

சேலம் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் 

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு டிச.24- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் டிச.25-ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06557/ 06558) இயக்கப்படுகின்றன. சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News December 23, 2024

சேலம் கோயிலில் நடிகர் யோகிபாபு வழிபாடு

image

சேலம் சாமிநாதபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று (டிச.23) வருகை தந்த, பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, அம்மனுக்கு மாலை, புடவைகளை வழங்கி சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

News December 23, 2024

அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் ரத்து

image

சேலம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (டிச.23) இயக்கப்படும் அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என விமான நிறுவனம் தகவல்.

News December 23, 2024

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1020 மெகாவாட் மின் உற்பத்தி

image

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது சீரமைக்கப்பட்டது. அடுத்து நேற்று மாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பழைய அனல்மின் நிலையத்தில் 1வது யூனிட் மற்றும் 4வது யூனிட் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

News December 23, 2024

சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து

image

டிச.23,30,ஜன.06 தேதிகளில் ப்ரௌனி- எர்ணாகுளம் ரயில், டிச.27,ஜன.03,10 தேதிகளில் எர்ணாகுளம்-ப்ரௌனி ரயில், மதுரை-கான்பூர் ரயில், டிச.25,ஜன.01, 08 தேதிகளில் கான்பூர்-மதுரை ரயில், டிச.25,ஜன.01 தேதிகளில் தன்பாத்- கோவை ரயில்,டிச.28-ஜன.04 தேதிகளில் கோவை-தன்பாத் ரயில் ஆகிய சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!