India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சி ஏழை மக்களை ஏமாற்றுகிறது எனவும் இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது எனவும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
சென்னையில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் பா.ஜ.க. அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அம்பேத்கர் சிலையை நோக்கி செல்ல முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கைது செய்தனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சேலம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு அளவுகளில் குழாய் உடன் கூடிய மண்பானைகள், சமையலுக்கு தேவையான மண்பானை சட்டிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் மண்பானைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
அரசின் டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்த முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளைக் கடைபிடிக்க விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் : ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 வது தெற்கு ஆசிய ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 14,17,19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கான இந்த தேர்வு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது . கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்குப் பகிரவும்.
ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.