India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், நெல்லை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சேலம்- சென்னை விமான கட்டணத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு ரூ.5,000 வரையும், சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ரூ.10,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.13ஆம் தேதி முதல் ஜன.16ஆம் தேதி வரை நான்கு நாட்களில் ரூபாய் 725.56 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் திருச்சி மண்டலம் ரூபாய் 179 கோடியுடன் முதலிடமும், சேலம் மண்டலம் ரூபாய் 151.60 கோடியுடன் 2-வது இடமும் பிடித்துள்ளன.
தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து 15 முகூர்த்தங்கள் வருகின்றன. இதன் காரணமாக, சேலம் சரகத்தில் பட்டுச்சேலைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. பட்டுச்சேலை, ஜரிகை சேலைகள் பல வகைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 2வது அக்ரஹாரம், இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஜாரி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பண்ணை வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அந்த வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, செல்லும் வழிகள் எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது, முக்கியமாக எங்கெங்கு பொருத்தப்பட வேண்டியுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை ஜனவரி 18 தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு வரை சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த, 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் இன்று (ஜன.17) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை, பனை மரத்தில் எரிப்பார்த்த பார்வையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விழாக்குழுவினர் அந்த நபரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த நபரை மரத்தில் இருந்து கீழே இறக்கி எச்சரித்து அனுப்பினர்.
சேலம் ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து, வேலூருக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த லைலா என்ற கர்ப்பிணிப் பெண்மணிக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதில், ஐந்தாவது பிளாட்பாரத்தில் , ரயில்வே மருத்துவர் மற்றும் 108 மருத்துவ பணியாளர்களால், பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் வேலூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஜன.17 இரவுரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை முதல் நடைபெற்ற போட்டியில் இதுவரையில் நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்கள் உட்பட பார்வையாளர்கள் என 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.