India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கும் ‘இ-நாம் 1.0’ தளம் தற்போது ‘இ-நாம் 2.0’ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வெளிப்படையான முறையில் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்கலாம். மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இதில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் <

சேலம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

சேலம், கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (52). இவர் நேற்று இரவு கருமாபுரம் அருகே பத்தாங்கல் மேடு பகுதியில், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர் பழனியாபுரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்குமார். இவர் வீட்டில் நேற்று டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவரது அவரது மனைவி புவனேஸ்வரி (25) தனக்கு பிடித்த பாடலை டிவியில் போடும்படி கூறியுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆத்தூர் போலீசார் விசாரணை!

சேலம் தேவேந்திரபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த விக்னேஷ், மோகன் மற்றும் சித்திரமணி ஆகியோர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரு தரப்பினரிடமும் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <
Sorry, no posts matched your criteria.