India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <

சேலம் மாவட்டத்தில் வரும் செப்.4ஆம் தேதி சிறுவாச்சூர் சமுதாயக் கூடம், தொளசம்பட்டி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வெங்கடேஷ்வரா திருமண மண்டபம், மேட்டூர் அணை -1 பாப்பம்மாள் திருமண மண்டபம், சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்: கொளத்தூர் அடுத்த சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நிக்காஸ் அருகிலுள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்ம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

▶️காலை 9 மணி இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளையின் சார்பில் தர்ணா போராட்டம் சங்க கட்டிடம் முன்பு 5 ரோடு ▶️காலை 9 மணி ஓமலூர் கருக்கல்வாடி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு ▶️மாலை 6 மணி ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு சாமி ஊர்வலம்▶️

சேலத்தில் நாளை(செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️செட்டிமாங்குறிச்சி காளியம்மன் கோவில் மண்டபம் நாச்சிபாளையம்
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️அசிரா
மணி குள்ளம்பட்டி சமுதாயக்கூடம்
▶️ஓமலூர் சமுதாயக்கூடம் செங்கரடு
▶️ கெங்கவள்ளி கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம் ஆட்டுக்காரன் வளைவு ▶️நங்கவல்லி ஆர் கே எஸ் திருமண மண்டபம் மூலப்புதூர்

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காசநோய் இல்லாத இந்தியா – 2025 என்ற நிலையை அடைவதற்காக சேலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை காசநோய் உள்ளதா?, என பரிசோதிக்கப்படும் நபர்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட காச நோயாளிகள் குறித்த விவரங்களை உடனடியாக சேலம் ஜிஹ.ஹெச்-யில் பதிவு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சேலம் மக்களே.., உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம்(IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க <

சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் செப்.10, 11 ஆகிய 2 நாட்களுக்கு சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் உள்ள அனிச்சம் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 1,343 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.75.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்குப் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.328 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன் உள்ளிட்ட 34 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.

சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நகர கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(செப்.3) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெங்கட்ராவ் ரோட்டில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
Sorry, no posts matched your criteria.