Salem

News March 14, 2026

சேலம்: மேட்டூரில் வசமாக சிக்கிய அதிகாரி!

image

மேட்டூர் குஞ்சாண்டியூரைச் சேர்ந்த இளங்கோவின் நிலப் பட்டா மாறுதலுக்காக, ₹14,000 லஞ்சம் கேட்ட நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மக்களே லஞ்சம் குறித்த புகார்களுக்கு 0427-2418735 என்ற எண்ணை அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கர் கைது

image

மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரின் நிலம் பட்டா மாறுதலுக்காக நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜை அணுகினார். அவர் ரூ.14,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த 14 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகிய இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கர் கைது

image

மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரின் நிலம் பட்டா மாறுதலுக்காக நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜை அணுகினார். அவர் ரூ.14,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த 14 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகிய இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

சேலம்: EB கட்டணம் அதிகமா வருதா? இதை CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE செய்து உதவுங்க.

News March 13, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 13, 2026

சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<> கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 13, 2026

சேலம்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .

1.இங்கு<> க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க.

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 13, 2026

சேலம் வழியாக தன்பாத் – போத்தனூர் ஸ்பெஷல் ட்ரெயின்

image

யில்களில் நிலவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து சேலம் வழியாகப் போத்தனூருக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்குத் தன்பாத்தில் புறப்பட்டு, 16-ஆம் தேதி காலை 7:10 மணிக்குச் சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் வழியாகக் காலை 11:20-க்கு போத்தனூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டு

News March 13, 2026

சேலம் மக்களே…இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ஆணையாளர், சேலம் மாநகராட்சி – 0427-2213131
மாவட்ட ஆட்சித் தலைவர் – 0427-2450301
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 0427-2451333
காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம் – 0427-2224000
காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் – 0427-2274747
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் – 0427-2450303
முக்கியமான எண்களை ஷேர் பண்ணுங்க

News March 13, 2026

சேலத்திக் அறிவித்தார் இபிஎஸ்!

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தற்போது நிலவிவரும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவற்றை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து, வரும் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள், கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!