Ranipet

News January 7, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலக்டர்!

image

திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில், முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. 2026-ம் ஆண்டிற்கான விருது பெறுவதற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை சேர்ந்த திருநங்கைகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News January 7, 2026

ராணிப்பேட்டை: குடும்பத்தில் பிரச்சனையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9894552203-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

ராணிப்பேட்டை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 7, 2026

ராணிப்பேட்டை: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 7, 2026

இராணிப்பேட்டை: 2,353 மாணவர்களுக்கு மடிக்கணினி

image

இராணிப்பேட்டையில் தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் பயிலும் 2,353 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் பல அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

News January 7, 2026

ராணிப்பேட்டை: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

ராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (ஜன.8) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பாக்கம், கலவை, திமிரி, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 7, 2026

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் வரும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகள், ஓடைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

ராணிப்பேட்டை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

பன்றி வெடியில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு

image

பெருவளையம் ஊராட்சி தச்சம்பட்டை சேர்ந்தவர் கண்ணுரெட்டி . இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது . இன்று ஜனவரி 6 ஆம் தேதி திடீரென வெடி சத்தம் கேட்டது. மாட்டின் உரிமையாளர் அங்கு ஓடி சென்று பார்த்ததில் மாட்டுக்கு தாடை கிழிந்து ரத்தம் ஒழுகியது . பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு சிக்கியது தெரிய வந்தது . விபத்தில் பசுமாடு உயிரிழந்தது காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!