India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.11 மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே 8 படகுகளில் மீன்பிடித்தபோது 5 பைபர் படகுகளில் மரத்தடி வீச்சரிவாளுடன் இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர் படகுகளை சுற்றி வளைத்தனர். அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் வலைகளை வெட்டிவிட்டு 7 படகுகளுடன் தப்பிச் சென்றனர். இதில் 1 படகு மீது பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பையை வீசினர். இதில் படகு இன்ஜின் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

இன்று (பிப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராம்நாடு மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸôர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

ராமநாதபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

ராமநாதபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியத்தின் குரூப் D தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பிப்16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04567- 230160 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை.
Sorry, no posts matched your criteria.