Ramanathapuram

News February 17, 2026

ராமநாதபுரம்: மின்சாரம் தாக்கி பலி

image

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி தனக்கு சொந்தமான வயல்வெளிகளில் மிளகாய், பருத்தி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டூழியம் செய்வதாக கூறி தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின்வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 17, 2026

இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

image

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 16, 2026

ராமநாதபுரம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம், கானா விலக்கு – பெருநாழி சாலையில் பரளச்சி அருகே, சாலையின் நடுவில் பைக் குறுக்கே வந்ததால், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சோலையப்பன் மற்றும் மகன் சோலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலெட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 16, 2026

ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

ராம்நாடு மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <>இங்கு கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்க.

News February 16, 2026

ராம்நாடு: டிகிரி போதும்., ரூ.58,514 சம்பளத்தில் RBI வங்கி வேலை

image

ராம்நாடு மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News February 16, 2026

ராமநாதபுரம்: இலவச சட்ட ஆலோசனை பெற..!

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 16, 2026

இராமநாதபுரம்: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

image

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி இராமநாதபுரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் அதன் வழித்தடங்களை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.

News February 16, 2026

இராமநாதபுரம்: ரூ.50 கோடி போதை பொருள் பறிமுதல்

image

ராமேஸ்வரம் – இலங்கை மன்னார் கடலில் ரூ.50 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ கஞ்சாவை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. ரோந்து சென்ற வீரர்கள் சந்தேகப்படகை சோதனையிட்டு 25 பண்டல்களில் 50 கிலோ போதைப்பொருள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றிய பொருள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக மீன்பிடி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2026

ராமநாதபுரம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று அவரது வீட்டில் அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!