India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேரனாரின் பேரன் சக்கரவர்த்தி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார் மேலும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூதாய வாக்கு திமுகவிலிருந்து பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் .21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார். சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளார். இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்களின் விவரம் இதோ.!
1.பரமக்குடி – எழில் இளவரசி
2.திருவாடனை – பிரேம்நாத்
3.இராமநாதபுரம் – முத்து கேசவன்
4.முதுகுளத்தூர் – சந்திர பிரபா

இராமநாதபுரம் மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <

இராமநாதபுரம், ரேஷன் கடைகளில் உங்களுக்கு என்ன பொருட்கள் கொடுக்கபட்டது. குறித்து அறிய தமிழக அரசு TNePDS மொபைல் செயலி உள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த லிங்கை <

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி – ரூ.7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இங்கு <

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று (பிப்.21) இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

ராமேஸ்வரம் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் ரூ.96 கோடி செலவில் 6 மாதங்களாக தீவிரமாக நடக்கின்றன. இங்கு சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற மார்ச்.01ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. நுழைவில் கோவில் வடிவ தூண்கள் & ரயில் பெட்டிகளில் கேண்டீன், தங்கும் அறைகள் அமைக்க 6 பெட்டிகள் நிறுவப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.