India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவுத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனவிழா மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது. இன்று தொடங்கி ஜன.19ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று பல அலுவலகங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தினமான 26-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமசபைகளிலும் கூட்டம் நடத்திட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு. இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்க அரசு உத்தரவு. உங்கள் பகுதி பிரச்னை குறித்து இதில் தெரியப்படுத்தலாம். (பிறரும் பயன் பெற ஷேர் செய்யலாம்)
இன்று (10.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்வாரி பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத விற்பனைக்காக சென்னை பதிவெண் காரில் கடத்தி வந்த 240 பிராந்தி பாட்டில்களை ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய தனி பிரிவு காவலர் சேகர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த குமார்(33), ராஜா(35), கணபதி(37) ஆகிய 3 பேரை ஏர்வாடி தர்ஹா போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சரவணன் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியில் பேசி வருவதாக மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதன் பின் பணி இடமாறுதலுக்கு உத்தவிட்டார். மேலும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
திருப்புல்லாணி, பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(48). இவா் பள்ளப்பச்சேரி அரசு உடல் பயிற்சிக் கூடத்தில் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளா்த்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, வனத்துறையினா் மேற்கண்ட சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாம்பை பறிமுதல் செய்த ராமநாதபுரம் வனத்துறை ராஜேந்திரனை கைது செய்தனர்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.09) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் எஸ்.பி ஜி.சந்தீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 2024ம் ஆண்டில் 28 நபா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 2023ம் ஆண்டை விட 75% அதிகம். போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 152 வழக்குகள் பதிவு. இது 2023ஆம் ஆண்டை விட 141% அதிகம். மணல் திருட்டு தொடா்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024ல் ஜாதிய மோதல்கள் நடைபெறவில்லை. *ஷேர்*
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுடன் சந்தித்து கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், கோரிக்கை வைத்தார்.
Sorry, no posts matched your criteria.