India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி கோவிலில் நடராஜருக்கு சந்தன காப்பு கலைக்கப்பட்டு நாளை(13.01.25)ஆருத்ர தரிசனம் நடைபெறும்.அதனால் நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். 3 மணி முதல் 3.300 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று 4.15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெறும்.
தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவர் டில்லர், களையெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கருவியின் வகைக்கேற்ப மொத்த விலையில் 50% வரை மானியம் வழங்கப்படும். இதனை விண்ணப்பிக்க தங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். (பயன் பெற பகிருங்கள்)
ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (ஜன.11) விசைப் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தது மட்டுமில்லாமல், 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 38). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக முதலமைச்சரின் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மதிப்பீட்டு தொகையில் 35% or ரூ.3.50 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தினால் மேலும் 6 % மானியம் வழங்கப்படும். தாட்கோ இணையதளத்தில் (https://newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம்; விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் மல்லிகைப் பூ பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000க்கு விற்கப்படுகிறது. தற்போது பனிப்பொழிவால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்தும் வரத்து இல்லாததால் மல்லிகை கிலோ இன்று (ஜன 11) ரூ.2000 வரை விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
மதுரையிலிருந்து தொண்டிக்கு லாரியில் கரும்பு கட்டுக்களை ஏற்றிக் கொண்டு நம்புதாளைக்கு வந்துள்ளார். இன்று காலை (ஜன 11) தூத்துக்குடியிலிருந்து வேளாங்கன்னிக்கு சாமி கும்பிட சென்ற கார் நின்ற லாரியில் மோதியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாந்தி, ஆரோக்கிய ஜெயசீலன், ஜேசு அடிமை, ஜோசப், ராசு அம்மாள் படுகாயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.11) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 15ம் தேதி, குடியரசு தினமான வருகிற 26ம் தேதி ஆகிய 2 நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களும் செயல்படாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.